சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நேரடியாக விசாரணை நடத்திய நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அளித்த அறிக்கையில், காவல்நிலையில் தந்தை, மகனை விடிய விடிய காவல்துறை லத்தியால் அடித்துள்ளனர். இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜையிலும், லத்திலும் ரத்தக் கறை இருந்தது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. cctv hard disk-யில் இடவசதி இருந்தும், தினமும் பதிவுகள் தானாகவே அழியும் வகையில் செட்டிங்ஸ் (setting) மாற்றப்பட்டுள்ளது. மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சி தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியபோது, தந்தை – மகன் இருவரும் விடிய விடிய தாக்கப்பட்டதாகவும், இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜை மற்றும் லத்தியில் ரத்தக் கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.
அனைத்து காவலர்களும், லத்தியை ஒப்படைத்தபோது காவலர் மகாராஜன் லத்தியை ஒப்படைக்க மறுத்துவிட்டார். விசாரணையின் போது காவலர் மகாராஜன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வற்புறுத்திக் கேட்ட பிறகே லத்தியை ஒப்படைத்தார். தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலம் அளிக்கும் போது மிகுந்த பயத்துடன் காணப்பட்டார்.
காவலர் ரேவதி வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது என அறிக்கையில் நடுவர் பாரதிதாசன் தெரிவித்துள்ளர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…