#BREAKING: காவல் நிலைய லத்தி, டேபிள்களில் ரத்தக்கறை.! மாஜிஸ்திரேட் அறிக்கை.!

Default Image

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நேரடியாக விசாரணை நடத்திய  நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அளித்த அறிக்கையில்,  காவல்நிலையில் தந்தை, மகனை விடிய விடிய காவல்துறை லத்தியால் அடித்துள்ளனர். இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜையிலும், லத்திலும் ரத்தக் கறை இருந்தது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.  cctv hard disk-யில் இடவசதி இருந்தும், தினமும் பதிவுகள் தானாகவே அழியும் வகையில் செட்டிங்ஸ் (setting) மாற்றப்பட்டுள்ளது. மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சி தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியபோது, தந்தை – மகன் இருவரும் விடிய விடிய தாக்கப்பட்டதாகவும், இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜை மற்றும் லத்தியில் ரத்தக் கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.

அனைத்து காவலர்களும், லத்தியை ஒப்படைத்தபோது காவலர் மகாராஜன் லத்தியை ஒப்படைக்க மறுத்துவிட்டார். விசாரணையின் போது காவலர் மகாராஜன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வற்புறுத்திக் கேட்ட பிறகே லத்தியை ஒப்படைத்தார். தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலம் அளிக்கும் போது மிகுந்த பயத்துடன் காணப்பட்டார்.

காவலர் ரேவதி வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது என அறிக்கையில் நடுவர் பாரதிதாசன் தெரிவித்துள்ளர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்