பிரதமர் வந்து ஒருவாரம் ஆன பின்னர் காவல்துறை மீது ஏன் இந்த குற்றசாட்டு.? டி.டி.வி.தினகரன் கேள்வி.!
தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. – டிடிவி.தினகரன் குற்றசாட்டு.
தமிழகத்தில் காவல்துறையினை சுதந்திரமாக செயல்பட வைத்து அதன் மீதான கரையை துடைக்க முதல்வர் தான் அனுமதி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ பிரதமர் வந்து ஒருமாதம் ஆன பின்னர் ஏன் அண்ணாமலை இந்த குற்றசாட்டை முன் வைத்தார் என தெரியவில்லை. இப்பொது தான் ஆதாரம் திரட்டுனாரா என தெரியவில்லை.’ என கூறினார்.
தமிழகத்தில் போதை கலாச்சரம் தற்போது அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் அவர்கள் தங்கள் குடும்பத்தையும், தங்களையும் பலப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். என்றும் டிடிவி குற்றம் சாட்டினார்.
பழனிச்சாமி தன் தவறை தற்போது தான் உணர்ந்துள்ளார்.ஓபிஎஸ் திமுகவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒரே அணியில் இணைவது என்ற கருத்தை நான் வரவேற்கிறேன். இப்போது இரட்டைஇலை யாரிடமும் இல்லை. ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் நீதிமன்றம் சென்றுள்ளனர். என தனது குற்றசாட்டை முன்வைத்தார் அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன்.