மக்கள் நீதி மையம் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு உளவுத்துறை எச்சரிக்கை
தமிழகத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த மீதமுள்ள தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 18 ம் தேதி நடைபெறுகிறது.
இது தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸ்யே என்று தெரிவித்தார்.
இது பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. இதற்க்கு பாஜக தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்க்கு பல தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டுள்ளது. பாஜக மற்றும் இந்து முன்னனி சார்ந்த அமைப்பினர் போராட்டம் நடத்த கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால் இரண்டு ரோந்து வாகனங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
.