தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு…!
அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 9:15 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்காலையான, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து அனைத்து கட்சியினருடனும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதனையடுத்து, இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.