கருணாஸ் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் அசோக் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இன்று அதிகாலை கைது செய்ய கருணாஸ் வீட்டிற்கு நெல்லை போலீசார் வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2017-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனால் நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
தற்போது கருணாஸ் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் அசோக் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…