போலீசார் தேடுதல் வேட்டை …! கருணாஸுக்கு தீவிர சிகிச்சை ..!மருத்துவர் தகவல்

Default Image

கருணாஸ் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் அசோக் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.
Image result for கருணாஸ்
இந்நிலையில் இன்று நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இன்று அதிகாலை கைது செய்ய கருணாஸ் வீட்டிற்கு நெல்லை போலீசார் வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2017-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனால் நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
தற்போது கருணாஸ் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் அசோக் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer