நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..!

case file

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

காற்று மாசு மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு  வெடித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தீபாவளி நாளான நேற்று, உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. அதேபோல், மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்த்து மொத்தம் 199 வழக்குகளும், கோவையில் 66 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்