சொத்துக்குவிப்பு புகாரில் தங்கமணி அவரது, மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி மீது நாமக்கலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை, நாமக்கல், கோவை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் கர்நாடகத்தில் ஒரு இடத்திலும், ஆந்திர மாநிலத்திலிருந்து 2 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக தங்கமணி, மனைவி, மகன் ரூ.4.85 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு. 2016 முதல் 2020 மார்ச் வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளார் என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவார். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் , கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதிமுக ஆட்சியில் தங்கமணி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்துள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …