குற்றவியல் நடைமுறைச் சட்டம் IPC 145ன் கீழ் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய நிலையில், இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும் என்று நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அதிமுக அலுவலக சீல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்க்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், மொத்த இடத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை இன்று மதியம் ஒத்தி வைத்தனர். நீதிபதி உத்தரவின்படி, காவல்துறை தரப்பு வீடியோ மற்றும் படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தரப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் IPC 145ன் கீழ் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. வன்முறையில் 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சினை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…