திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவலில் வைக்க 6- நாளிலிருந்து 4 -நாளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சார்ந்த சித்தவைத்தியர் திருத்தணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வந்தார்.
இவர் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் போலி மருத்துவர் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், காவல்துறையிடம் புகார் கொடுத்தது.இந்த புகார் அடைப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகாசலத்தை கைது செய்தனர்.
இதைதொடர்ந்து, சித்தவைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவலை எதிர்த்து திருத்தணிகாசலம் தொடர்ந்த வழக்கில், சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை போலீஸ் காவலில் வைக்க 6- நாளிலிருந்து 4 -நாளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…