திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவல் 6- நாளிலிருந்து 4 -நாளாக குறைவு.!

Default Image

திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவலில் வைக்க  6- நாளிலிருந்து 4 -நாளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சார்ந்த சித்தவைத்தியர் திருத்தணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வந்தார்.

இவர் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் போலி மருத்துவர் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், காவல்துறையிடம் புகார் கொடுத்தது.இந்த புகார் அடைப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தணிகாசலத்தை கைது செய்தனர். 

இதைதொடர்ந்து, சித்தவைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவலை எதிர்த்து திருத்தணிகாசலம் தொடர்ந்த வழக்கில், சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை போலீஸ் காவலில் வைக்க  6- நாளிலிருந்து 4 -நாளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்