கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் உத்தரவிட்டிருந்த நிலையில், சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.
கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள் மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடைபெற்றது. உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து, நேற்று விசாரணையின்போது பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.
அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சுவாதியிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பி நிலையில், அனைத்து கேள்விகளுக்கு நான் அவள் இல்லை என சுவாதி ஒரே பதில் சொல்லியதாக கூறப்பட்டது. கொலை வழக்கு தொடர்பான ஆடியோ, சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படத்தை காண்பித்து இது யாரென கேட்டபோதும் எனக்கு தெரியாது, நான் இல்லை என்று கூறியுள்ளார்.
முன்பு யாருக்கு பயந்து சாட்சி அளித்தேன், இது அனைத்துக்கும் காவல்துறைக்கும் பயந்துதான் சாட்சி அளித்தேன் என்றும் எழுதி கொடுத்து கூற சொன்னார்கள் எனவும் சுவாதி, நீதிபதிகளிடம் கூறினார். நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? என சுவாதிக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர்.
கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது, உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் வரும் புதன்கிழமை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
டைசி வாய்ப்பாக வழக்கு விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம், அன்றைய தினம் சுவாதி ஆஜராக வேண்டும். புதன்கிழமை ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பை நாமக்கல் காவல்துறை வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, செல்போனில் பேசுவதோ கூடாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். சுவாதி எவ்வித பயமும், அச்சுறுத்தலும் இன்றி நீதிமன்றம் வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் வரும் புதன்கிழமை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் கிளை உத்தரவின்படி, வளையப்பட்டியில் வசிக்கும் சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…