புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய சொன்னதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி, புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மணிகண்டனை இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் கோபாலபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…