ஆர்எஸ்எஸ் பேரணிக்கான அனுமதியை மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றத்தில் காவல் துறை மனு..!
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல்.
அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு செய்துள்ளது. மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் தற்போது உள்ள நிலைமையில் சட்டம்
ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதாகவும், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை விதிக்கபட்டதால் தற்போதைய பேரணியால் தேவையற்ற பதற்றம் ஏற்பட
வாய்ப்புள்ளது. எனவே பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.