அக்-27ல் சம்பவம் உறுதி.. மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.! . நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை!
அக்டோபர் 27-ம் தேதி நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டை அக்.27 ஆம் தேதி நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறுகிறது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும், அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, தவெக கட்சியின் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், தொண்டர்களை அழைத்து வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
மாநாட்டின் நிபந்தனைகள்
- போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
- பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த வேண்டும்.
- கர்ப்பிணி, முதியவர்களுக்கு தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
- மருத்துவ வசதியுடன் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மாநாட்டு திடலில் நிறுத்த வேண்டும்.
- பேனர், வளைவுகள் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்க கூடாது.
- விஜய் வரக்கூடிய வழிகளில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும்.
- மாநாடு திடலில் LED திரைகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
- திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
- சுகாதாரமான உணவு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்ட 17 நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.