முதல்வர் வீட்டின் முன் தீக்குளித்த நபரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகள்…! டிஜிபி பாராட்டு…!
முதல்வர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற நபரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தின் முன் வந்த வெற்றிமாறன் என்ற நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்றவைத்துள்ளார். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயை பாதியில் அனைத்த போலிசார் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இந்நிலையில், தீக்குளிக்க முயன்ற நபரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.