காவல்துறை அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட வாகனங்களில் இதை பயன்படுத்தக்கூடாது – டிஜிபி அதிரடி உத்தரவு
காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தல்.
பொதுவாக காவல்துறை அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட ரீதியாக பயன்படுத்தும் வாகனங்களில் போலீஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டி இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்றும், போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என்றும், காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது என்றும், மேலும் அலுவலக ரீதியாக பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் மட்டும் தான் போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.