‘சிக்குவாரா ஹெச்.ராஜா’ “ஆப்பு வைத்தது போலீஸ்”ஹெச்.ராஜா தலைமறைவு” போலீசாரின் தனிப்படைகள் தேடுதல் வேட்டை..!!
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைப்பு!
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.அதற்காக தமிழகத்தில் பல இடங்களில் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அது மட்டுமில்லாமல் காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.
அப்போது அவர் மயிறு , மண்ணாங்கட்டி , போலீஸ் ஈரல் அழுகி போச்சு , காவல்துறை ஊழல் நிறைந்து விட்டது. ஹைகோர்ட்டாவது மை…, வெக்கமா இல்ல , லஞ்சம் வாங்குறீங்க , இந்துக்களுக்கு விரோதியை இருக்கீங்க போலீஸ் , DGP வீட்டுல ரைடு என காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக சாடினார்.அது மட்டுமில்லாமல் மதவெறியை தூண்டுகிற மாதிரி மிக கொச்சையாகவும், ஆபாசமாகவும் தமிழக காவல்துறை , நீதித்துறையையும் கொஞ்சம் கூட மதிக்காமல் பேசினார்.
அவர் பேசியதை அங்கே இருந்த சிலர் வீடியோ எடுத்தனர்.அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.அவரின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டங்களை பலர் தெரிவித்தனர்.அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் மற்றும் அமைப்புகள் என கண்டனம் வலுத்து வந்தது.ஹெச்.ராஜாவை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென அனைவரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருமயம் போலீசார் காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தலைமறைவாகிவிட்டதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU