கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் காவல்துறை அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள் – அண்ணாமலை

Default Image

திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்  திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது! கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள்.

பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்