ரூ.14 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்த காவல்துறை அதிகாரி..! எஸ்.பி அதிரடி உத்தரவு..!
சுமார் 14 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டு கட்டுகளுடன் செல்பி எடுத்த காவல்துறை அதிகாரி பணியிடமாற்றம்.
உத்திரபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுமார் 14 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கட்டு கட்டாக அடுக்கி வைத்து அதனுடன் செல்பி எடுத்துள்ளார். அவரது குடும்பத்துடன் இணைந்து காவல்துறை அதிகாரி எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
இந்த நிலையில், இது தொடர்பாக எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அந்த காவல் துறை அதிகாரி பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்த புகைப்படம் அவரது குடும்ப சொத்தை விற்று கிடைத்த பணத்துடன் 2021ல் எடுக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.