சினிமாவில் தீரன் அதிகாரனாக இருந்த கதாபாத்திரம் போல் உண்மை வாழ்க்கையில் தீரன் அதிகாரனாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் இன்று பணி நிறைவு பெற்றார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்தவர்க் எஸ்.ஆர்.ஜாங்கிட். கல்லூரி பேராசிரியரான இவர் சிவில் சர்விஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று 1985 ம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். முதல் பணியாக தமிழகத்தில் அம்பாசமுத்திரம் ஊரில் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கினர். தொடந்து நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக திறம்பட செயல்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1996 ம் ஆண்டு காவல் கண்காணிப்பாளராக ஜாங்கிட் இருந்த போது ஏற்றப்பட்ட சாதிக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. அதே போல், வல்லநாடு பகுதியில் துப்பாக்கி சுடுதல் மையத்தை கொண்டு வந்ததும் இவர் தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாராக இருக்கும் போது முன்னாள் எம் எல் ஏ வீட்டில் கொள்ளை அடித்து அவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான பவாரிய கொள்ளையர்களை ராஜஸ்தான் மாநிலம் வரை சென்று கைது செய்து தண்டனை பெற்று தந்தார்.
பல்வேறு பணிகளை திறம்பட செயல்பட்டதற்க்காக தமிழக அரசின் முதலமைச்சர் விருதினை இரண்டு முறையும், மத்திய அரசின் குடியரசுத்தலைவர் விருது இரண்டு முறையும், பிரதமர் விருது ஒரு முறையும் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் குற்றத்தடுப்பு டிஐஜி உள்ளிட்ட பதவிகளில் இருந்த ஜாங்கிட் கும்பகோணம் அரசு போக்குவரத்து ஊழல் தடுப்பு அதிகாரியாக இருந்தார். இந்நிலையில், அவரது பணி காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…