ரியல் “தீரன் அதிகாரன்” ஆக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் ஒய்வு பெற்றார்!

Default Image

சினிமாவில் தீரன் அதிகாரனாக இருந்த கதாபாத்திரம் போல் உண்மை வாழ்க்கையில் தீரன் அதிகாரனாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் இன்று பணி நிறைவு பெற்றார்.

 

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்தவர்க் எஸ்.ஆர்.ஜாங்கிட். கல்லூரி பேராசிரியரான இவர் சிவில் சர்விஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று 1985 ம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். முதல் பணியாக தமிழகத்தில் அம்பாசமுத்திரம் ஊரில் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கினர்.  தொடந்து நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக திறம்பட செயல்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1996 ம் ஆண்டு காவல் கண்காணிப்பாளராக ஜாங்கிட் இருந்த போது ஏற்றப்பட்ட சாதிக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. அதே போல், வல்லநாடு பகுதியில் துப்பாக்கி சுடுதல் மையத்தை கொண்டு வந்ததும் இவர் தான்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாராக இருக்கும் போது முன்னாள் எம் எல் ஏ வீட்டில் கொள்ளை அடித்து அவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான பவாரிய கொள்ளையர்களை  ராஜஸ்தான் மாநிலம் வரை சென்று கைது செய்து தண்டனை பெற்று தந்தார்.

பல்வேறு பணிகளை திறம்பட செயல்பட்டதற்க்காக தமிழக அரசின் முதலமைச்சர் விருதினை இரண்டு முறையும், மத்திய அரசின் குடியரசுத்தலைவர் விருது இரண்டு முறையும், பிரதமர் விருது ஒரு முறையும் பெற்றுள்ளார்.

தமிழக அரசின் குற்றத்தடுப்பு டிஐஜி உள்ளிட்ட பதவிகளில் இருந்த ஜாங்கிட் கும்பகோணம் அரசு போக்குவரத்து ஊழல் தடுப்பு அதிகாரியாக இருந்தார். இந்நிலையில், அவரது பணி காலம் இன்றுடன் நிறைவடைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்