சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், காவலர் முத்துராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…