பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக காவல்துறை விசாரணை..!

Published by
murugan

பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார்.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  அதற்கான மனுவை நீதிமன்றத்தில் காவல்துறை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே எந்த ஒரு நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்ற சந்தேகம் காவல்துறைக்கு எழுந்த நிலையில், இது தொடர்பான விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது.

அதற்காக நேற்று பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இரண்டு பேரையும் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலம் வீடியோ பதிவு மூலம்  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை பள்ளி முதல்வரை மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பினார்.

பின்னர், பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். பள்ளி முதல்வரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரியுமா..? அதேபோல பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ மற்றும் மெசேஜ்களை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்திருந்தது..?

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மீது முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Published by
murugan
Tags: PSBB

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

2 hours ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

4 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

4 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

5 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

6 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

6 hours ago