கோவை கார் வெடிப்பு : கைதான 5 பேர் வீட்டில் சோதனை.!
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 நபர்கள் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்று கிழமை நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷ் முபின் உடன் தொடர்புடையதாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.
அதன் பிறகு, அப்சர் கான் என்பவர் 6வது நபராக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் தமிழக முதல்வர் பரிந்துரையின் பேரில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ இந்த கார் வெடிப்பு சம்பந்தமான அடுத்தகட்ட விசாரணையை தொடங்க உள்ளனர்.
இந்நிலையில், என்ஐஏ விசாரணையை தொடங்குவதற்கு முன்பாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 நபர்கள் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.