வாகன சோதனையின் போது வேன் மோதி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – வேன் ஓட்டுநர் கைது..!

வாகன சோதனையின் போது வேன் மோதி காவல் ஆய்வாளர் உயிரிழந்த நிலையில், வேன் ஓட்டுநர் கைது.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணியாற்றி வருகிறார். அவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த வேன் நிற்காமல், அவர் மீது மோதி விட்டு உடனடியாக சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி சென்ற வேனை சிசிடிவி காட்சிகளை வைத்து இன்று காலை தோகைமலையில் போலீசார் மீட்டனர். மேலும் வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது வேன் ஓட்டுநர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025