சினிமா பாணியில் புகார் ..!சென்னையில் காணாமல் போன செருப்பு …!காணாமல் போன செருப்பை தேடும் பணியில் போலீஸ்…!
காவல் நிலையத்தில் ஒருவர் சென்னையில் காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமாறு புகார் தெரிவித்துள்ளார்.
ராஜேஷ்குப்தா என்பவர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஆவார்.இவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் கடை ஒன்றை பாரிசில் வைத்துள்ளார்.ரத்த பரிசோதனை செய்வதற்காக அருகே உள்ள ரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்றார் .பின் பரிசோதனை செய்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது ராஜேஷ்குப்தாவின் செருப்பு மாயமானது.ரூ.800 மதிப்புள்ள அந்த செருப்பு வாங்கி இரண்டே நாட்கள் தான் ஆவதாக தெரிவித்தார் ராஜேஷ்குப்தா.எனவே காணாமல் போன செருப்பு தொடர்பாக தண்டையார் பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தண்டையார் பேட்டை போலீசாரும், விசாரணை நடத்தி செருப்பினை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
படத்தில் வருவது போல இவர் செருப்பை காணவில்லை என்று புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.