போலீசார் அதிரடி ..! துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதி கைது ..!
![Rowdy Arrest](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/07/Rowdy-Arrest-file-image.webp)
சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட . அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை தீவீரமாக கைது செய்து நடவடிவக்கை எடுத்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்படும் வருகின்றனர். மேலும், ஒரு சில ரவுடிகள் பயத்தில் சரணடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், சென்னை அருகே தலைமறைவாக இருந்து வந்த ரவுடியான சேதுபதியை துப்பாக்கி முனையில் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
தற்போது கைதாகி உள்ள இதை ரவுடி சேதுபதி மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களாக ரவுடி சேதுபதி போலீசாரிடமிருந்து தப்பி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், சென்னை புழல் அருகே சூரபட்டு பகுதியில் ரவுடி சேதுபதி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அங்கு சென்ற போலீசார் ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் தற்போது கைது செய்துள்ளனர். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)