ஓயாத கொத்தடிமை..தமிழகத்திற்கு கடத்த முயன்ற 31 ஜர்க்கண்ட் பெண்கள்!!பின்புலத்தில் திரூப்பூர்

Default Image
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொத்தடிமைகளாக கடத்த முயன்ற 31 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வட மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இதில் பெண்களும், சிறுமி,சிறுவர்களும் அடங்குவர்.இவர்கள் அனைவரும் இடைத்தரகர்கள் மூலமாக இங்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.  மேலும் இந்த இடைத்தரகர்கள் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக இங்கு விட்டு செல்வதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்து நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 31 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து 30க்கும் அதிகமாக  பெண்களை தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்துவர அம்மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் ஏற்பாட்டால் அங்கு உள்ள லதேஹர் மாவட்டத்தில் இருந்து 9 சிறுமிகள் என 31 பெண்களை பேருந்து ஒன்றில்  ஏற்றி கொண்டு  தமிழகத்தை நோக்கி புறப்பட்டார்.
வழியில் லதேஹர் மாவட்டத்தின் தாதா என்கிற கிராமத்தில் போலீசார் அவ்வழியாக வந்த அந்த பேருந்தை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட இடைத்தரகரிடம் பெண்களை வேலைக்கு அழைத்து செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்காட்டியே தமிழகத்துக்கு கடத்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இடைத்தரகர், பேருந்து ஒட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.கடத்த முயன்ற 31 பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். தமிழகத்திற்கு எந்த தொழிற்சாலைக்கு கொத்தடிமையாக இவர்களை கடத்த முறன்றனர் என்பது குறித்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்