சென்னையில் நகை வியாபாரியிடம் 1.4 கோடி ரூபாய் வழிப்பறி.! 70 லட்சத்தை மீட்டு கொடுத்த போலீசார்.!
சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 2ஆம் தேதி நடந்த 1.4 கோடி ரூபாய் வழிப்பறி சம்பவத்தில் இருந்து 70 லட்சம் ரூபாய் பணத்தை குற்றவாளிகளிடம் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சென்னை சௌகார்பேட்டையில் நகைகள் மொத்தமாக வாங்குவதற்கு வெளிமாநில வியபாரிகள் வருவது வழக்கமான ஒன்று. அப்படி தான் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி ஆந்திராவில் இருந்து வரும் சுப்பாராவ் எனும் நகை வியாபாரி தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க வந்துள்ளார் .
1.40 லட்ச ரூபாய் வழிப்பறி : சவுகார்பேட்டையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வியாபாரிகள் வைத்திருந்த 1.40 லட்ச ரூபாயை வழிப்பறி செய்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து இருவரும் யானைக்கவுனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை வைத்து இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின் பெயரில் யானைக்கவுனி காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
70 லட்ச ரூபாய் மீட்பு : இந்நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில், பல்வேறு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட இம்ரான் என்பவர் தான் குற்றவாளி என்பதை கண்டறிந்து, அவரையும் அவருடன் சேர்த்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வாலிபரிசுசெய்யப்பட்ட 1.4 கோடி ரூபாயில் 70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.