யூ-டியூபர் மதனின்,சொகுசு கார்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
யூ-டியூபர் மதன் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசி பல வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து,யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக உள்ளார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். மதன் யூ-டியூப் சேனலின் நிர்வாகியாக மதன் மனைவி கிருத்திகா இருந்ததால் கிருத்திகா கைது செய்யப்பட்டு வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து,யூடியூபர் மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில்,முன்- ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவானது, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதி யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக உள்ளது என்று கூறி முன்ஜாமீன் தர மறுத்துள்ளார்.
இதன்காரணமாக,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.இதனால்,மதனை சென்னைக்கு அழைத்து வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்,பெண்களை ஆபாசமாக சித்தரித்தல்,ஆபாசமாக பேசுதல்,ஐடி சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல்,தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக,இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 509,209 B உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில்,அவரது மனைவி கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில்,கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாகவும்,மேலும்,மதன் பிரபலமடைவதற்காக,அவரை புகழ்ந்து பேச ஒரு பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…