“திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பே இல்லை”- அமைச்சர் ஜெயக்குமார்!
திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பே இல்லை எனவும், தி.மு.க நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசும், தலா 2,500 ரூபாய் பணமும் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று சென்னை, தரமணி பகுதியில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பையும், 2,500 ரூபாயை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்ததாக கூறினார். மேலும், தி.மு.க நடத்துவது கிராம சபையா? அல்லது குண்டர் சபையா? என கேள்வி எழுப்பிய அமைச்சர், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை இருப்பவரே உண்மையான தலைவராக இருக்க முடியும் என்றும், கேள்விக்கு பதிலளிக்கும் தைரியமின்றி மு.க.ஸ்டாலின் வீண் குற்றச்சாட்டுகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.