தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24 வரை நடைபெறும் என்பதால், அதுவரை காவலர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்க உரையாற்றி,தொடங்கி வைத்தார்.
மேலும்,நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,பேரவையின் 2 வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுவதால், அதுவரை காவலர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக,டிஜிபி அலுவலகம் கூறியதாவது
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அவ்வாறு கூட்டம் நடைபெறும்போது,ஏதேனும் சட்ட, ஒழுங்கு சிக்கல்கள் ஏற்பட்டால், அவை சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என்பதால்,அவற்றை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் அனைவரும் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்.எனவே,மாநிலம் முழுவதும் எவ்வித குற்றச்செயல்களும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம், காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு விடுமுறை வழங்க கூடாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலைய அதிகாரிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…