பீலா வெங்கடேசன் புகார்… முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது.!

Beela Venkatesn - Rajesh Das

சென்னை: காவலாளியை தாக்கி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி 3 ஆண்டுகள் தண்டனை பெற்றவர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரையில் சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை வாங்கியுள்ளார்.

இதற்கிடையில், ராஜேஷ் தாஸ் மனைவியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றார். தனது பெயரையும் பீலா ராஜேஷ் என்பதில் இருந்து பீலா வெங்கடேசன் (தந்தை பெயர்) என அரசு பதிவேடுகளில் மாற்றம் செய்துகொண்டு தனித்து வசித்து வருகிறார்.

பீலா வெங்கடேசன் தனது ஐஏஎஸ் அதிகாரத்தை பயன்படுத்தி தையூரில் உள்ள தனது வீட்டில் மின் இணைப்பை துண்டித்து விட்டார் என ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நடைபெற்று வரும் சூழலில், பீலா வெங்கடேசன் , ராஜேஷ் தாஸ் மீது ஓர் புதிய புகாரை அளித்தார்.

அதாவது, தான் (பீலா வெங்கடேசன்) வசித்து வரும் தையூர் பண்ணை வீட்டிற்கு ராஜேஷ் தாஸ் அத்துமீறி நுழைந்ததாகவும், காவலாளியை தாக்கியதாவும் சென்னை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் தற்போது ராஜேஷ் தாஸை கைது செய்த போலீசார் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்