ஞானசேகரனை காவலில் எடுக்கும் போலீஸ்? 10 நாட்கள் விசாரிக்க மனு தாக்கல்!
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் கைதான ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழுந்த நிலையில், அது நிகாரிக்கப்பட்டு இவ்வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து விசாரணையை தீவிரப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டடது.
இந்நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஞானசேகரனை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.