திமுக ஆட்சி…ரவுடிகளை கண்டு அஞ்சும் காவல்துறை – ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

Default Image

தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டகாசம் கொடிகட்டி பறக்கிறது. இதனால்,ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் காலம் ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் காலம் ஏற்பட்டுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்று:

மேலும்,”நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ,நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ,அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்” என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா.ஆனால் அதற்கு மாறான நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.அந்த வகையில்,காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி,ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

திமுக ஆட்சி – காவல்துறையினரே மிரட்டப்படும் நிகழ்வு:

குறிப்பாக,திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதிலிருந்து பாலியல் வன்கொடுமைகளும்,கொலைகளும்,கொள்ளைகளும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும்,வியபாரிகளும்,இன்னும் சொல்லப்போனால், காவல்துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

பாலியல் தொல்லை:

இதனிடையே,விருதுநகர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்ததில் உள்ளூர் திமுக வினருக்கு பங்கு இருக்கிறது.இதேபோன்று,மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் திமுக பிரமுகர்.பின்னர் அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில்,அந்த திமுக பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு,ரவுடிகளின் அட்டகாசம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளின் பயமின்மை.எனவே,ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொன்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
IND vs PAK
dragon movie box office
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon