குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன் என முதல்வர் ட்வீட்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 40. இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகள் பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வீடியோ சமூக வலைதளவில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர் தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.
தற்போது பணிபுரிந்து வரும் பென்னாலூர் பேட்டை அருகே உள்ள திடீர் நகரில் சுமார் 40 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை சந்தித்து அவர்களை பள்ளிக்கு அனுப்புமாறு, அவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் நான் செய்கிறேன் என்றும் கண்டிப்புடன் தெரிவித்தார்.
முதல்வர் வாழ்த்து
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில் இந்த காவல்துறை அதிகாரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், காலைச் செய்தித்தாளில் மகிழ்ச்சிதரும் செய்தியைப் படித்தேன்! பகிர்கிறேன். குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…