இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், ராச்சாண்டார் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் திரு. ஜான்சன் வயது 42 ஈடுபட்டிருந்தார். பணியின் போதே அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் உடனே ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். எனினும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தலைமைக் காவலர் ஜான்சன் உயிர் தியாகம் செய்தார். இதே போல், உள்ளாட்சி தேர்தல் பணியின் போது சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடை நம்பி ஆகியோரும் தங்களது உயிரை பணியின் போது தியாகம் செய்தனர். இந்த உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த மூன்று காவலர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடை நம்பி ஆகிய 3 காவலர்களின் குடுமபத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சரின் பொது நிவரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…