தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை செல்வதால், அவர்களை கைது செய்ய திருவொற்றியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் காலை தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் திருத்தணி நோக்கி புறப்பட்டார். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பியின் உத்தரவை எதிர்த்து, பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று காலை, சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் இருந்து இன்று வேல் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் முருகன் தொடங்கினார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை செல்வதால், அவர்களை கைது செய்து, அழைத்து செல்ல திருவொற்றியூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…