அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் புகார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
இந்த நிலையில்,அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…