சென்னை மாநகர சீர்மிகு காவல் துறையில் பணியின் போது உயிரிழந்த சீர்மிகு காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் வழங்க சர்வதேச சமண வர்த்தக அமைப்பினர் தாமாக முன் வந்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில், கடந்த 2 ஆண்டுகளில் பணியின் போது உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களை சேர்ந்த 96 குழந்தைகளுக்கு சுமார் 10.75 லட்சம் நிதி உதவியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். அப்போது மாநகர தலைமையிட கூடுதல் ஆணையர் அமல்ராஜ்மற்றும் இணை ஆணையர்கள் சுதாகர், மல்லிகா, துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் , பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சமுதாயநலக் கூடம் வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று 10 நாட்களில் பரங்கிமலை மற்றும் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குளிரூட்டப்பட்ட சமுதாய நலக் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டது. உயிரிழந்த காவலர் ஒருவரின் மகள் பிரியதர்ஷினி என்பவர் மேல்நிலை இரண்டாம் ஆண்டு முடித்துவிட்டு, பண வசதியின்றி மேற்படிப்பு படிக்க முடியாமல் இருந்தார். இதை அறிந்த உடனே நான் தகுந்த அதிகாரிகளுடன் பேசி அந்த மாணவிக்கு அவர் விரும்பிய கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்தேன். அதை தொடர்ந்து, தனியார் தொண்டு நிறுவனம் உதவியுடன் தற்போது 96 மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க 10.75 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 123 மாணவர்கள் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் அனுமதி சீட்டு வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…