ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!
சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.
சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் இன்று முதல் பணியர்த்தப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று காலை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மாநகரின் காவல் ஆணையராக பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவல் பயிற்சித்துறை டிஜிபியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அருண் ஐபிஎஸ் சென்னை மாநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டம் ஒழுங்கை காப்பாறுவதே எனது முதல் பணி என குறிப்பிட்டார்.
மேலும் கூறிய சென்னை ஆணையர் அருண், அனைத்து காவல்த்துறை அதிகாரிகளும் அவர்கள் பொறுப்பை உணர்ந்து, அவர்களது தினசரி பணிகளை செய்தாலே குற்றங்கள் குறையும் என கூறினார். அண்மையில் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி செய்தியாளர்கள் கேட்கையில், நான் இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். ஆம்ஸ்ட்ராங் வழக்கு பற்றி எனக்கு முழுதாக தெரியாது என கூறினார்.
அடுத்து, சென்னையில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் இதுவே முதல் பணி. அடுத்து ரவுடிகளை ஒடுக்கணும். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதனையும் சரி செய்ய வேண்டும். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நல்ல பெயர் கிடைக்க செய்வேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம் என்று இன்றைய முதல் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.