காவலர் வீரவணக்க நாள் !144 குண்டுகள் முழங்கியவாறு மரியாதை
காவலர் வீரவணக்க நாளான இன்று நாட்டின் பாதுகாப்பிற்காக கடந்த ஓராண்டில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து 144 குண்டுகள் முழங்கியவாறு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் தமிழக டிஜிபி திரிபாதி,மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.