குடியரசு தலைவரின் காவல் விருது..தமிழக காவல் அதிகாரிகள் 24 பேர் தேர்வு!முறுக்கும் காக்கிசட்டைகள் ஜோர்
- இன்று நாடு முழுவதும் 71 வது குடியரசு தினம் கொண்டாட்டம்
- தமிழகத்தை சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையின் 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் தென்னிந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றக்கூடிய காவல்துறை அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்விருது ஆனது காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நடப்பாண்டின் இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகளை தமிழக காவல் துறையை சேர்ந்த 3 காவல் அதிகரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
அதன் விவரம்:
- கூடுதல் காவல் துறை இயக்குநர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு -அபய்குமார் சிங் , சென்னை)
- கூடுதல் காவல்துறை இயக்குநர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு-லேஷ்குமார் யாதவ்
- காவல் கண்காணிப்பாளர்-II, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு-பெ.ல்கு.பெத்துவிஜயன்
ஆகியோர் இந்த விருதினை பெறுகின்றனர்.
21 காவல் அதிகரிகளுக்கு இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுகள் அறிவிப்பு விபரம்:
- சேலம் மாநகர காவல் ஆணையாளர்– க.செந்தில்குமார்
- சென்னை காவல் கண்காணிப்பாளர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு-சி.ராஜேஸ்வரி
- காவல் துணை ஆணையாளர், போக்குவரத்து-தெற்கு, சென்னை – .மா. மயில்வாகனன்
- சென்னை காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை-2, புனித தோமையார் மலை -ர.ரவிசந்திரன்
- சென்னை காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை-1-கி.சவுந்திரராஜன்
- சென்னை காவல் துணை கண்காணிப்பாளர், பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை– ச.வசந்தன்
- நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை-கோ.மதியழகன்
- காவல் துணை கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திருநெல்வேலி-வே.அனில்குமார்
- காவல் உதவி ஆணையாளர், மாநகர குற்ற பிரிவு, திருப்பூர்-கா.சுந்தர்ராஜ்
- காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தலைமையிடம், சென்னை-சே.ராமதாஸ்
- காவல் துணை கண்காணிப்பாளர், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, கோவை உட்கோட்டம்-ந.ரவிகுமார்
- காவல் உதவி ஆணையாளர், புனித தோமையார் மலை போக்குவரத்து அமலாக்கப்பிரிவு, சென்னை-ஷே.அன்வர் பாட்ஷா
- காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நாகப்பட்டினம்-க.ரமேஷ்குமார்
- காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை-ம.நந்தகுமார்
- காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, ஈரோடு-மு.நடராஜன்
- காவல் ஆய்வாளர், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, தூத்துக்குடி-ந.திருப்பதி
- சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை-அ.மணிவேலு
- சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ந.ஜெயசந்திரன்
- சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை-த.டேவிட்
- சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ஜே.பி.சிவக்குமார்
- சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ஒய்.சந்திரசேகரன்
ஆகியோர் இவ்விருதினை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.