திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வெறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தச்சம்பட்டு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை சார்ந்த விமலா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு , ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது விமலாவுக்கு தெரியவர இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விமாலா இரண்டு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தன் கணவர் ஒரு மைனர் பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், தற்போது அந்தப் பெண் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார் இதையடுத்து புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஒரு காவலரை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…