சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தி சேர்ந்த குடிமகன்கள் தர்மபுரிக்கு சென்று தங்களுக்கு தேவையான சாராயங்களை வாங்கி வந்து அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தற்பொழுது முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…
பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற…
சென்னை : மதுரையில் பிறந்த நிவேதா பெத்துராஜ் 11 வயது முதல் துபாயில் வசித்து வந்தார். அங்கேயே படிப்பை முடித்துவிட்டு மாடலிங்…
சென்னை : இன்று (நவம்பர் 4) சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் பகுதியில் மதுராந்தகம்…
உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம்…
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர்.…