பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணன் தப்பியோட முயலும் போது போலிஸாரால் சுடப்பட்டார்.

Pam Saravanan

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலைமறைவான அவரை போலீஸ் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தது.

ஏற்கனவே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆந்திர-தமிழக எல்லையில் தலைமறையாக இருந்த பாம் சரவணனை நேற்று கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும் போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது, போலீஸ் மீது அவர் நாட்டு வெடிகுண்டை வீசினார். bஇதில் எஸ்ஐ ஒருவர் காயமடைந்தாக சொல்லப்படுகிறது. இதையடுத்து காலில் சுட்டு போலீஸ் பிடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் அடைந்த ரவுடி பாம் சரவணனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரவுடி பாம் சரவணன் 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகளில் தொடர்புடையவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்