சமூக வலைதளமான முகநூலில் நல்லவர்களை போல நடித்து, ஆசை வார்த்தை காட்டி, தவறான முறையில் அவர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். இதையே பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் செய்துள்ளது.
கல்லூரி பெண்கள், பணக்கார பெண்கள், மிகவும் அழகான பெண்கள் போன்றோர்களை மட்டும் தேர்ந்தெடுத்து சபரி மற்றும் அவரின் 3 நண்பர்கள் ஆபாச முறையில் பெண்களை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதில் சுமார் 200 பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவியுடன் முகநூல் நண்பராகி அதன் பின்னர் அவரை நேரில் பார்க்க சபரி அழைத்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காக காத்திருக்குமாறு கூறியுள்ளான். அப்போது திடீரென்று காரில் தனது நண்பர்களுடன் வந்து, அப்பெண்ணை பலவந்தமாக வற்புறுத்தி ஆபாசமான முறையில் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இந்த ஆபாச புகைப்படங்களை வைத்து அந்த மாணவியிடம் ஆரம்பத்தில் பணத்தை மிரட்டி வாங்கி வந்த நிலையில், அதன் பின் பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதை தாங்கி கொள்ள முடியாத மாணவி காவல்துறையினரை நாடியுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.இதன் பின் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. கைது செய்து இவர்களின் மொபைலை ஆய்வு செய்ததில் 200 பெண்களின் ஆபாச புகைப்படங்கள் சிக்கியது.அதேபோல் 20 பேருடன் இந்த கும்பல் இயங்கி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை சிலர் மிரட்டியதாகவும் அதன் காரணமாகவும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல் ஜோதி நகர் பார் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
நாகராஜ் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.இதன் பின் அதிமுகவைச் சேர்ந்த நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கோவை எஸ்.பி. பாண்டியராஜன் கூறுகையில்,உள்நோக்கத்துடன் தவறான செய்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பொள்ளாச்சியில் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை .இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கோவை எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…