காவல் துறையினரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் – காவல் ஆணையர் விஸ்வநாதன் !
சென்னையில் வாகனம் ஓட்டும் பொழுது காவல்துறையில் உள்ளவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுமக்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் மீது போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.
மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.